எள் உருண்டை செய்யலாம் வாங்க..!

Rebecca

வெல்லம், எள்ளில் இரும்புச் சத்து அதிகம் எனவே ரத்த சோகை வராமல் தடுக்கும்.
இளைத்து இருப்பவர்கள் எள் சாப்பிட்டால், உடல் நலம் நன்றாகத் தேறும். தினமும் இரண்டு எள் உருண்டைகள் சாப்பிடலாம்.
எள், நாட்டு வெல்லம் - தலா அரை கிலோ, பச்சரிசி 50 கிராம்.
பச்சரிசியை மிக்ஸியில் அரைத்து சலித்துக்கொள்ளவும்.
எள்ளை தண்ணீரில் ஊறவைத்து, மேல் தோல் நீங்க லேசாக இடித்து, வெயிலில் சிறிது நேரம் உலரவைக்கவும்.
பிறகு, பச்சரிசி, வெல்லம், எள் மூன்றையும் ஒன்றாக இடித்த பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.
இந்தக் கலவையை எலுமிச்சம் பழ அளவில் உருண்டையாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும். இப்பொது சுவையான எள் உருண்டை ரெடி.
Explore