புதினா குளிர்ச்சியையும், புத்துணர்ச்சியும் அளிக்கக்கூடியது. வயிற்றுப் பொருமல், வாயுத்தொல்லை, வயிற்றுப்புண்களை குணப்படுத்தும் தன்மையும் புதினா புலாவிற்கு இருக்கிறது..புதினா -2 கைபிடி, பச்சரிசி-1 ஆழாக்கு, பெரிய வெங்காயம் 2, பச்சைமிளகாய் -5, இஞ்சி, தேங்காய் துருவல்-1 துண்டு , பால் - 2 கப், உப்பு- தேவைக்கு.சீரகம் -1 தேக்கரண்டி, ஏலக்காய் -4, கிராம்பு -4, பட்டை 1 சிறுதுண்டு, நெய் -3 தேக்கரண்டி.வாணலியில் சிறிது நெய்விட்டு புதினாவை சேர்த்து அதில் இஞ்சியை நறுக்கிப்போட்டு வதக்கி, நன்றாக ஆறிய பின் அரைத்து வைத்துக் கொள்ளவும்..சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை போன்றவைகளை தூளாக்கவும். பின் குக்கர் பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் தூளாக்கப்பட்ட மசால்களை சேருங்கள்..வெங்காயம், பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டி கொள்ளவும் அதில் அரிசி, அரைத்து வைத்துள்ள புதினா, உப்பு ஆகியவைகளை சேர்த்து நன்றாக கிளறுங்கள்..பின்பு தேங்காய் பால் சேர்த்து இரண்டரை பங்கு நீரை கொட்டி, புலாவை நன்றாக வேகவிட வேண்டும். அதன் பின் எடுத்து பரிமாறினால் சுவையான புதினா புலாவ் ரெடி..Explore