ஆப்பிள்,வாழையை பின்னுக்குத் தள்ளும் ‘எலுமிச்சை’

undefined

எலுமிச்சையில் கலோரிகள் குறைவாக உள்ளன.
வைட்டமின் C, பிளாவனாய்டுகள், கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஊக்குவிக்கும் பைட்டோ கெமிக்கல்கள் போன்றவை நிரம்பியுள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, செரிமானத்திற்கு உதவுகின்றன. இதய பிரச்சினைகளின் அபாயத்தை குறைக்கின்றன.
எலுமிச்சைக்கு தனித்துவமான மதிப்பை அளிப்பது வைட்டமின், ஊட்டச்சத்துக்கள் மட்டுமல்ல.
எலுமிச்சை உடலுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறது என்பதையும் ஆராய்ச்சி யாளர்கள் கவனத்தில் கொண்டிருக்கிறார்கள்.
உடலில் பி.எச். சமநிலையில் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. குடல் ஆரோக்கியத்திற்கும், ஒட்டுமொத்த செரிமானத்திற்கும் பயனளிக்கக்கூடியது.
எலுமிச்சையில் உள்ள பிளாவனாய்டுகள் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை குறைக்க உதவும்.
இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும். குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
எலுமிச்சையில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவிடும்.
எலுமிச்சை சாறு மட்டுமின்றி எலுமிச்சை தோலும் நன்மை பயக்கக்கூடியது.
எலுமிச்சை பழ தோல்களில் லிமோனின் நிறைந்துள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட அத்தியாவசிய எண்ணெய் வகையை சார்ந்தது.
எலுமிச்சையின் தோலை துருவி, ஜூஸ்களில் சேர்க்கலாம்.
Explore