உடல் எடையை குறைக்கும் கொள்ளு துவையல்!!

Rebecca

கொள்ளு-1 கப், கடலை பருப்பு-1 தேக்கரண்டி, கருப்பு உளுந்து -1 தேக்கரண்டி, தேங்காய் துருவல் -1 கப், புளி- 10 கிராம் (கொட்டை பாக்கு அளவு), காய்ந்த மிளகாய்- 3.
பெருங்காயத்தூள்- 1 தேக்கரண்டி, உப்பு- தேவைக்கு, கடுகு -1 தேக்கரண்டி, நல்லெண்ணெய் -2 தேக்கரண்டி, கறிவேப்பிலை -தேவைக்கு
கடாயில் கொள்ளை கொட்டி வாசனை வரும் வரை வறுத்து தனியே எடுத்து வையுங்கள்.
அதே கடாயில் இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடலைபருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய் போன்றவற்றை போட்டு வறுத்தெடுங்கள்.
வறுத்துவைத்திருக்கும் அனைத்து பொருட்களையும் மிக்சியில் கொட்டி, புளியும் சேர்த்து அரையுங்கள். பின் உப்பும், பெருங்காயத் தூளும் கலந்திடுங்கள்.
இறுதியாக கறிவேப்பிலை தாளித்துக்கொட்டி பயன்படுத்தினால் சுவையான கொள்ளு துவையல் தயார்.
Explore