Maalaimalar
விரல்களில் சொடக்கு எடுத்தால் ஆர்த்ரிட்டிஸ் வரும் என்கிறார்களே, உண்மை என்ன தெரியுமா?
சொடக்கு விடுவதால் நேரடியாக மூட்டுவாதம் வராது என ஆய்வுகள் கூறுகின்றன.
மூட்டுகளுக்கு இடையே உள்ள சைனோவியல் திரவத்தில் உள்ள வாயு குமிழ்கள் உடையும்போது தான் இந்த சத்தம் வருகிறது.
மீண்டும் குமிழ் உருவாக 20 நிமிடம் ஆகும். இதனால், கைப் பிடிப்பு வலிமை குறையலாம்
விரல் மூட்டுகளில் லேசான வீக்கம் மற்றும் தற்காலிக வலி ஏற்படும்
தவறான கோணத்தில் இழுத்தால் தசைநார்கள் பாதிக்கப்படலாம். மூட்டு விலகல் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது
வலியின்றி சொடக்கு சத்தம் வருவது பாதிப்பில்லை. ஆனால் வலி + வீக்கம் + சிவந்து போதல் + மடக்க முடியாமை அறிகுறி இருந்தால் கவனம் தேவை.
சொடக்கு எடுக்கும்போது வலி, வீக்கம், இறுக்கம் இருந்தால் உடனே எலும்பியல் மருத்துவரை அணுகவும்.