Maalaimalar
கார்த்திகை தீபத் திருநாளில் நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் செய்யப்படும் பனை ஓலை கொழுக்கட்டை மிகவும் பிரபலமானது.
பனை ஓலை - 15
அரிசி மாவு - 2 கப்
கருப்பட்டி - 1½ கப்
பாசிப்பயறு வறுத்தது - சிறிதளவு
கருப்பு எள் - சிறிதளவு
ஏலக்காய் தூள் - சிறிதளவு
சுக்குப்பொடி - சிறிதளவு
பனை ஓலையை நன்கு கழுவி துடைத்து, நடுப்பகுதியை சம நீளத் துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
பச்சரிசி அரிசி மாவை ஊற வைத்து அரைத்து சலித்துக்கொள்ளவும்.
பாசிப்பயறு சிவந்துவிடாமல், நல்ல வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுக்கவும். நன்கு ஆறிய பிறகு, சப்பாத்தி கட்டையால் லேசாக அழுத்தி உருட்டினால் பருப்பு மாவாகாமல் சரியாகப் பாதியாக உடையும்.
அரிசி மாவில் துருவிய தேங்காய், பாசிப்பயறு, எள், ஏலக்காய் தூள் மற்றும் சுக்குப்பொடியை சேர்த்து கலக்கவும்.
கருப்பட்டியை பாகாக காய்த்து வடிகட்டிக்கொள்ளவும். அதை அரிசி மாவில் ஊற்றி கட்டி பிடிக்காமல் கொழுக்கட்டை பதத்திற்கு பிசையவும்
பனை ஓலையில் மாவை வைத்து மற்றொரு ஓலை வைத்து மூடி கட்ட வேண்டும்.
பனை ஓலையை இட்லி பாத்திரத்தில் வைத்து 10–15 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்தால் சுவையான ஓலை கொழுக்கட்டை தயார்.