கந்த சஷ்டி விரதம்

Maalaimalar

தமிழ் மக்களின் வழிபாட்டில் முருகப்பெருமானுக்கு மிக முக்கிய இடம் உண்டு.

'தமிழ்க் கடவுள்' கந்தனின் அருளைப் பெற கடைப்பிடிக்கப்படும் விரதங்களுள் சிறப்பு வாய்ந்தது 'கந்தசஷ்டி விரதம்'.

ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி தொடங்கி ஆறாம் நாளான சஷ்டி திதி வரை 6 நாட்கள் கந்தசஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது.

முருகன் படத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து, சிவப்பு மலர்களால் அலங்கரித்து, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் படைக்கலாம். விளக்கேற்றி, முருகப்பெருமானிடம் ஆசீர்வாதம் பெற்று விரதத்தை தொடங்க வேண்டும்.

விரதம் இருக்கும் ஆறு நாட்களும் முழுமையாக உபவாசம் (உணவின்றி) இருப்பது மிகச்சிறப்பு. பால், பழம் மட்டும் அருந்தி விரதம் இருக்கலாம்.

விரத நாட்களில் முருகப்பெருமானின் திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்தும், 'ஓம் சரவண பவ' என்ற மந்திரத்தை மனதில் நிறுத்தி வழிபட வேண்டும்.

விரதம் இருப்பவர்கள் ஆறாவது நாள் நடைபெறும் சூரசம்ஹாரத்தைக் கண்டு தரிசித்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஏழாம் நாளில் நடைபெறும் தெய்வானை - முருகன் திருக்கல்யாணத்தைக் கண்டு தரிசித்து, பிரசாதம் உட்கொண்டும் விரதத்தை நிறைவு செய்யலாம்.

'சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்' என்பது பழமொழி. இதன் பொருள், சஷ்டி திதியில் விரதம் இருந்தால், கருப்பையில் (அகப்பை) குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதாகும்.

நோயற்ற வாழ்வு, பகைவர் அச்சமின்மை, மன அமைதி மற்றும் சகல காரியங்களிலும் வெற்றி பெற கந்த சஷ்டி விரதம் வழிவகுக்கிறது.