தக்காளி அதிகம் சாப்பிட்டாலோ, சமையலில் அதிகம் சேர்த்தாலோ சிறுநீரக கற்கள் உருவாகும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது..உலகளவில் பொதுவாக உண்ணப்படும் காய்கறிகளுள் ஒன்றாக தக்காளி விளங்குகிறது..தக்காளி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அப்படியானால் சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக அல்லவா இருக்க வேண்டும்..உடலில் நீரிழப்பு ஏற்படுவதே சிறுநீரக கற்கள் படிவதற்கு முதன்மையான காரணமாக இருக்கிறது..சிறுநீரக கற்கள் அனைத்தும் ஒரே படிகங்களால் ஆனவை அல்ல.கால்சியம் ஆக்சலேட் உள்பட பிற ஆக்சலேட் படிகங்கள், யூரிக் அமிலம், ஸ்ட்ரூவைட் கற்கள், சிஸ்டன் கற்கள் போன்றவற்றின் காரணமாகவும் சிறுநீரக கற்கள் உருவாகலாம்..ஆக்சலேட் படிகங்கள் மூலம் சிறுநீரக கற்கள் உருவாகுவது அதிகமாக இருக்கிறது..தக்காளியில் ஆக்சலேட் இருப்பதால் அதனை சிறுநீரக கற்களுடன் முடிச்சு போட்டுவிட்டனர்..தக்காளியில் ஆக்சலேட்டுகள் உள்ளன. பொதுவாக சிறுநீரக கற்கள் உருவாகுவதற்கு ஆக்சலேட்டுகள் காரணமாக அமைந்திருக்கின்றன..தக்காளியில் ஆக்சலேட்டுகள் இருப்பதால் இந்த கட்டுக்கதை தோன்றிவிட்டது..100 கிராம் தக்காளியில் சுமார் 5 மில்லி கிராம் அளவுக்கே ஆக்சலேட்டுகள் உள்ளன. அவை சிறுநீரக கற்களை ஏற்படுத்த போதுமானதல்ல..தக்காளி சிறுநீரக கற்களை உண்டாக்கும் என்பது கட்டுக்கதையே..Explore