உலகில் வாழும் ஆசிய யானை இனங்களில் இந்தியா 60% யானைகளுக்கு வீடாக உள்ளது.
இந்திய வனவிலங்கு நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய அகில இந்திய ஒத்திசைவான யானை மதிப்பீடு 2025-ன் படி, இந்தியாவின் காட்டு யானைகளின் எண்ணிக்கை 22,446 ஆக உள்ளது.
இந்த எண்ணிக்கை 2017-ம் ஆண்டின் 27,312 மதிப்பீட்டை விட தோராயமாக 17% குறைவு.
இந்த தொகை கணக்கெடுப்பு, இந்தியாவின் முதல் DNA அடிப்படையிலான யானை எண்ணிக்கையாக அதாவது யானையின் சாணம் சேகரிக்கப்பட்டு DNA சோதனை மூலம் கணக்கிடப்பட்டுள்ளது.
யானை எண்ணிக்கை குறைவதற்கு வாழ்விட இழப்பு, உள்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் மனித-யானை மோதல் போன்ற அச்சுறுத்தல்கள் காரணங்களாக இருக்கலாம் என்று SAIEE அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஆராய்ச்சியாளர்கள் யானை வாழ்விடங்களில் 21,056 சாண மாதிரிகளைச் சேகரித்தனர், அவை 6.7 லட்சம் கி.மீ. வனப் பாதைகளை உள்ளடக்கியது.
டி.என்.ஏ கைரேகையைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் 4,065 தனித்துவமான யானைகளைக் கண்டறிந்து, இதன் காரணமாகவே 2021 இல் தொடங்கிய அறிக்கையை தாமதப்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைகள் இந்தியாவின் மிகப்பெரிய யானைகள் காப்பகமாகத் 11,934 யானைகளை கொண்டுள்ளது.
மாநில அளவில், கர்நாடகா (6,013), அசாம் (4,159), தமிழ்நாடு (3,136), கேரளா (2,785), மற்றும் உத்தரகண்ட் (1,792) உள்ளன.
ஒடிசாவில் (912) ,அருணாச்சலப் பிரதேசம் (617), மேகாலயா (677), நாகாலாந்து (252) மற்றும் திரிபுராவில் (153), மத்தியப் பிரதேசம் (97) மற்றும் மகாராஷ்டிரா (63) ஆகியவை மிகச்சிறிய, துண்டு துண்டான மந்தைகளைக் யானைகள் கொண்டுள்ளன.