சினிமா எனது வாழ்க்கையின் காதலாக மாறும் என்று தெரியாது- நயன்தாரா உருக்கம்

undefined

ஐயா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா
தனது 2-ஆவது படத்திலேயே சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.
தொடர்ந்து தமிழ், பிற மொழிப்படங்கள் என உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்தார்.
ரசிகர்களின் மனதைக் கவர்ந்து லேடி சூப்பர்ஸ்டார் எனும் அந்தஸ்தைப் பெற்றார் நயன்தாரா.
தற்போது நயன்தாரா தனது சோசியல் மீடியாவில் ஒரு ஸ்டோரியை பதிவிட்டுள்ளார்.
அதில், 22 ஆண்டுகளுக்கு முன்பு நான் முதன்முதலாக கேமரா முன் நின்றேன். அப்போது சினிமா எனது வாழ்க்கையின் காதலாக மாறும் என்று தெரியாது.
கேமரா முன் நின்று இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது. ஒவ்வொரு ஃப்ரேம், ஒவ்வொரு ஷாட், ஒவ்வொரு அமைதியும் என்னை உருவாக்கியது.
என்னை செதுக்கியது, என் காயத்தை ஆற்றியது, என்னை உருவாக்கியது.
என்றென்றும் நன்றியுடன் ❤️ என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
Explore