சமீபத்தில் ஒரு விருது விழாவின் உரையாடலின் போது, மாளவிகா மோகனன் ஒரு சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்துள்ளார்..பொதுவாக தெரியாத, புதிய எண்களில் இருந்து வரும் அழைப்புகளை நான் ஏற்க மாட்டேன்..மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நிறைய அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது..நிறைய அழைப்புகளை நான் ஏற்கவில்லை. PRO என்னை அழைத்து ரஜினி சாரின் போனை எடுக்கவில்லையா? என்று கேட்டார்..ஒரு கணம் அப்படியே அதிர்ச்சியடைந்துவிட்டேன். பின்னர் மீண்டும் அந்த எண்ணுக்கு அழைத்து பேசினேன்..ரஜினி சாரின் பணிவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..ரஜினி சார் மாஸ்டரில் நீங்கள் அழகாக இருந்தீர்கள். உங்கள் படத்தின் அபார வெற்றிக்கு வாழ்த்துகள் என்று சொன்னார்..வாழ்வில் அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. மிகவும் அழகான தருணம் என மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்..Explore