Maalaimalar
காஞ்சிபுரம், பனாரஸ் பட்டுப்புடவைகளை நேரடி வெயிலில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மாதத்துக்கு ஒருமுறை புடவையின் மடிப்பை மாற்றி வைத்தால் ஆண்டாண்டு காலத்துக்கு துணியின் தன்மை பாதிக்கப்படாமல் உடுத்த முடியும்.
பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து வைக்காமல், மெல்லிய மஸ்லின் அல்லது பருத்தித் துணியில் சுற்றி குளிர்ச்சியான, இருட்டான இடத்தில் வைக்க வேண்டும்.
புதிய புடவைகளை தனியாக 4,5 முறை குளிர்ந்த நீரில் துவைப்பது, மற்ற ஆடைகளில் சாயம் படிவதைத் தவிர்க்க உதவும்.
ஜார்ஜெட், சிபான் போன்ற மெல்லிய துணிகளில் இழை இழுபடாமல் இருக்கவும், துணியின் மிருதுத்தன்மை மாறாமல் இருக்கவும் வாஷிங் மெஷினில் துவைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
மென்மையான டிடர்ஜென்ட் கொண்டு கைகளால் துவைப்பதோடு, புடவையை முறுக்கிப் பிழியாமல், உலர்ந்த துண்டில் புடவையைச் சுருட்டி வைத்து நீரை உறிஞ்சிய பின் நிழலில் உலர்த்த வேண்டும்.
புடவைகளில் சுருக்கம் தெரியாமல் இருக்க குளிர்ந்த நீரில் துவைத்து டிரையரில் போடாமல் புடவையை தட்டையாகவோ அல்லது அகலமான ஹேங்கரில் தொங்கவிட்டோ உலர்த்த வேண்டும்.
லினன் துணியின் இயற்கையான தோற்றத்தைப் பாதுகாக்க மிதமான சூட்டில் இஸ்திரி செய்ய வேண்டும்.
தொடர்ந்து WEB STORY- களை காண இங்கே க்ளிக் செய்யவும்