முருங்கை பூ வடை செய்வது எப்படி?

Rebecca

முருங்கை கீரையை 'கீரைகளின் ராணி' என கூறினால் அது மிகையாகாது. முருங்கை கீரையில் ஏராளமான சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.
முருங்கை பூ- 200 கிராம், கடலைபருப்பு- 100 கிராம், துவரம் பருப்பு- 50 கிராம், உளுந்தம் பருப்பு- 50 கிராம், பெரிய வெங்காயம்- 2, பச்சை மிளகாய்- 4, உப்பு- சுவைக்கேற்ப, நல்லெண்ணெய்- தேவைக்கேற்ப
கடலை பருப்பு மற்றும் துவரம்பருப்பு இரண்டையும் நீர் ஊற்றி தனித்தனியாக 2 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஊற வைத்த பருப்புகளை கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
முருங்கைப் பூ, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிதாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்து வைத்துள்ள பருப்பு கலவையில் உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து மாவை வடைகளாக தட்டி, பொரித்தெடுக்கவும்.
சுவையான முருங்கை பூ வடை ரெடி!
Explore