வாழைப்பழத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத என இரண்டு வகையான நார்ச்சத்துகள் உள்ளன..கரையக்கூடிய நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால் நீண்டநேரம் பசி எடுக்காது..கரையாத நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது..பழுக்காத (பச்சை) வாழைப்பழங்களில் எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டார்ச் (resistant starch) அதிகம் உள்ளது..இது செரிமானத்திற்கு கடினமாக இருந்தாலும், நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது ..இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது..நீரிழிவு இல்லாதவர்களுக்கு வாழைப்பழங்கள் இரத்த சர்க்கரை அளவில் பெரிய ஏற்றத்தை ஏற்படுத்தாது..ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துகள் சர்க்கரை உறிஞ்சுதலை சீராக்க உதவுகின்றன..இருப்பினும் பழுத்த வாழைப்பழங்களில் அதிகளவு சர்க்கரை உள்ளதால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிக வாழைப்பழங்கள் எடுத்துக்கொள்வதை தவிர்ப்பது நல்லது..ஒரு நாளைக்கு ஒரேயொரு சிறிய அல்லது நடுத்தர வாழைப்பழத்தை மட்டும் சாப்பிடுவது நல்லது..Explore