நடிகை மாளவிகா மோகனன் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்..துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'பட்டம் போல' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் களம் இறங்கினார்..லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்..தனுஷுடன் இணைந்து 'மாறன்' திரைப்படத்திலும், பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து தங்கலான் படத்தில் நடித்துள்ளார்..தொடர்ந்து முன்னணி நடிகையாக தடம் பதித்துவரும் மாளவிகா மோகன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்..நடிகை சமந்தா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வறுகின்றனர்..Explore