மீதமான தேங்காய் சட்னியை கெட்டியான புளிப்பு மோரில் சேர்த்து ஒரு கொதி விட்டால், சுவையான மோர்க்குழம்பு தயார்..ஊறுகாய் பாட்டிலில் மிளகாய் வண்டல் மீந்திருந்தால், பாகற்காய், வெண்டைக்காய் போன்றவற்றுக்குள் அடைத்து 'ஸ்டப்டு' வெஜிடபிள் கறி செய்யலாம்..மீதமான சாம்பாருடன் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வறுத்த ரவையைக் கொட்டிக் கிளறவும். வித்தியாசமான சுவையில் உடனடி கிச்சடி ரெடி..பிரட் மீந்து விட்டதா? அதை மிக்சியில் போட்டு பொடியாக்கி, உப்பு, கரம் மசாலா, கொத்தமல்லித் தழை, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து 'கட்லெட்டாக பொரித்து எடுக்கலாம்..மீந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்..Explore