Maalaimalar
காஞ்சிபுரம் பட்டு (தமிழ்நாடு): தங்க மற்றும் வெள்ளி ஜரிகை வேலைப்பாடுகளுக்கும், நீடித்த உழைப்பிற்கும் புகழ்பெற்றது.
பனாரசி பட்டு (உத்தரப் பிரதேசம்): வாரணாசியில் நெய்யப்படும் இந்த புடவைகள், முகலாயர் காலத்து கலைநயமிக்க வடிவமைப்பு மற்றும் கனமான தங்க/வெள்ளி ஜரிகை வேலைப்பாடுகளுக்கு உலகளவில் பிரபலமானவை.
மதுரை சுங்குடி (தமிழ்நாடு): டை அண்ட் டை (Tie and Dye) முறையில் தயாரிக்கப்படும் இந்த பருத்தி புடவைகள், உடலுக்குக் குளிர்ச்சியையும், அழகான வட்ட வடிவ புள்ளிகள் கொண்ட வடிவமைப்பையும் கொண்டவை.
மங்களகிரி ஆடைகள் (ஆந்திரப் பிரதேசம்): மிக நேர்த்தியான பருத்தி துணிகள் மற்றும் அதன் பார்டரில் உள்ள நிஜாம் ஜரிகை வடிவமைப்பிற்கு இவை பிரசித்தி பெற்றவை
போச்சம்பள்ளி இக்கட் (தெலுங்கானா): நூல்களுக்கு முன்கூட்டியே சாயம் பூசி, பின்னர் வடிவியல் (Geometric) அமைப்புகளில் நெசவு செய்யும் தனித்துவமான கலை.
ஜிஐ முத்திரை என்பது நெசவாளர்களின் பாரம்பரிய உரிமையைப் பாதுகாப்பதோடு, நுகர்வோருக்கு அசல் மற்றும் தரமான பொருட்கள் கிடைப்பதையும் உறுதி செய்கிறது.