பூஜைக்குரிய மலர்களும் பலன்களும்

Maalaimalar

இறைவழிபாடு என்பது நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் துன்பங்களை மறந்து, மன அமைதியை பெறும் ஒரு வழியாகும்.

தீபம் ஏற்றுவது, மலர் மாலை சூட்டுவது, நைவேத்தியம் படைப்பது போன்ற பல வழிகளில் நாம் இறைவனை வழிபடுகிறோம்.

இறைவனுக்கு உகந்த மலர் சூட்டி வழிபடுவது மிகவும் விசேஷம். மலர்கள் மென்மையானவை என்பதால் இறைவன் மலர்களில் வாசம் செய்வதாக நம்பிக்கை.

இறைவனுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. மகாலட்சுமிக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் பெருகும்.

முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர் சூட்டி வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.

சிவபெருமானுக்கு எருக்கம் பூ சமர்பித்து வழிபட்டால் பாவங்கள் விலகும்.

மகாவிஷ்ணுவுக்கு பாரி ஜாதம் சூட்டி வழிபட்டால் தம்பதி ஒற்றுமை பலப்படும்.

விநாயகருக்கு செம்பருத்தி பூ சூட்டி வழிபட்டால் தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.

சரஸ்வதி தேவிக்கு வெண் தாமரை மலர் சூட்டி வழிபட்டால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம்.

கிருஷ்ணருக்கு கடம்ப மலரால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்.

பார்வதி தேவிக்கு நறுமணம் மிகுந்த மல்லிகை, முல்லை மலர்கள் சூட்டி வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.