இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வருபவர் பூமி பட்னேகர்..பூமி பட்னேகர் தற்போது தொழில் அதிபராகவும் மாறியுள்ளார்..தனது சகோதரி சமிக்சா பட்னேகருடன் குடிநீர் விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார்..இதுகுறித்து அவர், மக்களுக்கு சுத்தமான இமாலய குடிநீரை வழங்குவதே எனது குறிக்கோள்.2 ஆண்டுகளாக இதற்காக பணியாற்றி வருவதாகவும், இமாச்சல பிரதேசத்தில் தொழிற்சாலையை நிறுவியிருப்பதாகவும் கூறியுள்ளார்..பெண்கள் மட்டுமே இந்த தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள்..இந்த குடிநீர் பாட்டிலில் பிளாஸ்டிக் பயன்படுத்தவில்லை. பாட்டில் மூடி கூட மக்கும் தன்மை கொண்டது..15 ஆண்டுகளில் ஒவ்வொரு வீட்டிலும் எங்கள் பாட்டில் இருக்கும் என்று நம்புகிறோம் என்றும் கூறியுள்ளார்..பூமி பட்னேகரை வாழ்த்த முடிவு செய்த ரசிகர்கள், தண்ணீர் பாட்டிலின் விலையை கேட்டதும் அந்த முடிவில் இருந்து பின்வாங்கி விட்டார்கள்..அரை லிட்டர் பாட்டிலுக்கு ரூ.150-ம், 750 மில்லி வாட்டர் பாட்டிலுக்கு ரூ.200-ம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது..தண்ணீர் பாட்டிலுக்கு இவ்வளவு விலையா, மனசாட்சி இல்லையா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்..Explore