செயற்கை பனீர்... கவனம் தேவை

Maalaimalar

இயற்கை பனீருக்கும், செயற்கை பனீருக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன.

பனீரை வடமாநிலங்களில் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஒருசில மாநிலங்களில் பனீருடன் வெஜிடபிள் ஆயில் சேர்த்து அனலாக் பனீர் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது.

பேக்கிங் கவரில் அனலாக் பனீர் என்று குறிப்பிடாமல் பனீர் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் விலை குறைவு என்பதால் அதை பனீர் என்று கருதி பலரும் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ஸ்டார்ச் என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்படும் பனீர் நமது உடலில் செரிமானம் ஆகாது. அதை தொடர்ந்து சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.

செயற்கை பனீரில் நிறமூட்டி சேர்ப்பதால் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உடல் எடை அதிகரிக்கும்.

கடைகளில் விற்பனை செய்யப்படும் பனீரில் என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற விவரத்தை கவனிப்பதோடு, தயாரித்த தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும்.

வேக வைக்கும்போது இயற்கை பனீரை விட செயற்கை பனீர் கடினமாக இருக்கும். ஸ்டார்ச் மூலமாக தயாரித்த பனீரில் அயோடின் சேர்த்தால் கருப்பு அல்லது நீல நிறமாக மாறும். எண்ணெய் பிரிந்து வரும்.