மாலை நேர ஸ்நாக்ஸ் மொறுமொறு குழல் அப்பம்

Maalaimalar

தேவையான பொருட்கள்:

வறுத்த அரிசி மாவு - 1 கப்

தேங்காய் துருவல் - 1 கப்

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 4

சீரகம் - 1 ஸ்பூன்

கருப்பு எள் - கால் ஸ்பூன்

பெருங்காயம் - கால் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தேங்காய் துருவல், வெங்காயம், பூண்டை நன்கு அரைத்துக்கொள்ளவும்.

அரிசி மாவில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்து கொள்ளவும். அதனுடன் பெருங்காயம், எள், சீரகம் கலந்து பிசைந்து கொள்ளவும்.

அரிசி மாவில் நன்கு கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி பிசையவும். மாவு லேசான சூடாக இருக்கும்போதே கையில் ஒட்டாத பதத்தில் பிசைந்து எடுக்கவும்.

மாவில் தேங்காய் எண்ணெய் தடவி, அதை பூரி கட்டையில் வைத்து உருண்டைகளாக தேய்த்து வட்ட வடிவில் வெட்ட வேண்டும்.

மாவின் ஒரு முனையுடன் மறுமுனையையும் ஒட்டி குழல் போல தயார் செய்ய வேண்டும்.

இதனை மிதமான தீயில் பொரித்து எடுத்தால் குழல் அப்பம் தயார்.