Maalaimalar
காலையில் காபி குடித்ததும் உடனே புத்துணர்ச்சி வந்தது போல உணரலாம். ஆனால் அதில் இருக்கும் காஃபின் புதிதாக உடலில் ஆற்றலை உருவாக்குவதில்லை.
காபியில் உள்ள காஃபின் ஒரு நரம்பு மண்டலத் தூண்டுதலாகும். இது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் கலந்து செயல்படுகிறது.
மூளையில் சோர்வை உணரச் செய்யும் அடினோசின் என்ற வேதிப்பொருளின் செயல்பாட்டை தற்காலிகமாக தடுப்பதால் அதிக புத்துணர்ச்சியோடும், விழிப்புடனும், கவனத்துடனும் செயல்படுவது போல உணரலாம்.
காபி மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் தரும் டோபமைன் மற்றும் நார்ட்ரீனலின் போன்ற வேதிப்பொருட்களின் சுரப்பை தூண்டுகிறது.
காபியில் இருக்கும் காஃபின் கவனிக்கும் திறனையும், செயல்திறனையும் மேம்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மாலையிலோ, இரவிலோ காபி குடித்தால் அதிலிருக்கும் காஃபின் தூக்கத்திற்கு இடையூறு அளிக்கும்.
காபியை புத்துணர்ச்சி தரும் பானமாக கருதாமல் சரியான சமயத்தில், அளவோடு பருகுவதே சிறந்தது.
தூங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்பாகவே காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது.