தோஷங்கள் நீங்க செய்ய வேண்டிய தானங்கள்..!

Maalaimalar

கிரங்கங்களின் தோஷம் நீங்கவும், அதன் தாக்கம் குறையவும், செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடவும் எந்த வகையான விலங்குகளுக்கு, என்ன உணவு கொடுக்கலாம்?

பித்ரு தோஷம் நீங்க

பசுவிற்கு அகத்திக்கீரை மற்றும் வாழைப்பழம் கொடுப்பது கர்ம வினை தீர்ந்து, பித்ரு தோஷம் நீங்கி செழிப்புடன் வாழ வகை செய்து கொடுக்கும்.

ராகு-கேது

ராகு-கேது தோஷம் உள்ளவர்கள் பைரவரின் வாகனமான நாயிற்கு உணவு அளித்து வருவது பலன் தரும். ஊர்வனவற்றிக்கு உணவு அளிப்பதும் நன்மை தரும்.

சூரியன்

குதிரைக்கு உணவு அளித்தால் சூரிய கிரகத்தினால் உண்டாகக் கூடிய தோஷங்கள் நிவர்த்தி ஆகும். அவர் தரும் கெடு பலன்கள் குறைந்து நல்வாழ்வு பெறுவீர்கள்.

சந்திரன்

சந்திர தோஷம் இருந்தால் நீரில் வாழும் உயிர்களுக்கு உணவு அளிக்கலாம். மீனுக்கு உணவு கொடுப்பது பலன் தரும்.

செவ்வாய்

செவ்வாய் வீரம், கம்பீரம், ரத்தம், உணர்ச்சியை தூண்டுதல், ஆண்மை, வீரியம் போன்றவற்றின் கிரகமாக இருக்கிறது. இதில் பிரச்சனை ஏற்படாமல் இருக்கவே தோஷம் உள்ளவர்கள் தோஷம் உள்ளவர்களையே திருமணம் செய்து கொள்வது நல்லது என்று கூறப்படுகிறது. எனினும் அதன் தாக்கம் குறைய ஆடு மற்றும் குரங்குகளுக்கு உணவு அளிக்கலாம்.

புதன்

புதன் கிரகத்தினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை குறைக்க பறவைகளுக்கு உணவு அளிப்பது நல்லது. தினமும் பறவைகளுக்கு தண்ணீர் மற்றும் உங்களால் முடிந்த உணவினை அளித்து வரலாம்.

வியாழன்

யானை அல்லது மாடு இவற்றிற்கு உணவு அளித்தால் குரு பகவானால் ஏற்படும் கெடு பலன்கள் நீங்கும்.

சுக்கிரன்

சுக்கிரனால் உண்டாகக் கூடிய பிரச்சனைகளை தவிர்க்க புறாவிற்கு தானியங்களை அளித்து வருவது நல்ல பலனை தரும்.

சனி

சனீஸ்வரன் ஆசி பெற கருப்பு நிற விலங்குகளுக்கு அல்லது பறவைகளுக்கு உணவு அளிப்பது நல்லது.

தொடர்ந்து WEB STORY- களை காண இங்கே க்ளிக் செய்யவும்