Maalaimalar
"நான் சொல்லாமலேயே அவர் புரிந்து கொள்ள வேண்டும்" என்று எதிர்பார்க்காதீர்கள். உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாகவும், மென்மையாகவும் எடுத்துச் சொல்லுங்கள்.
"நீங்கள் என்னைக் கவனிப்பதே இல்லை" என்று குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, "நாம் இருவரும் நேரம் செலவிட்டால் நன்றாக இருக்கும்" என உங்கள் உணர்வைச் சொல்லுங்கள்.
உங்கள் கணவர் அலுவலகப் பணிச்சுமை அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது முக்கியமான விஷயங்களைப் பேசாதீர்கள். அவர் ரிலாக்ஸாக இருக்கும் நேரத்தைத் தேர்ந்தெடுங்கள்.
பொருளாதார நெருக்கடி அல்லது வேலைப் பளு காரணமாகக் கூட அவர் அமைதியாக இருக்கலாம். அவரது மன அழுத்தத்தையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
ஆண்கள் தங்களது உழைப்புக்குக் கிடைக்கும் சிறிய பாராட்டுகளுக்கு அதிகம் ஏங்குவார்கள். அவர் செய்யும் சின்னச் சின்ன உதவிகளுக்கு நன்றி சொல்லிப் பாருங்கள்; மாற்றம் தெரியும்.
தங்களது கணவர் மற்றும் மனைவியை பெற்றோர்களிடமோ, உறவினரிடமோ அல்லது மற்றவர்கள் முன்பு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது அந்த உறவை வலுப்படுத்தும்.
குழந்தைகள், குடும்பப் பொறுப்புகளைத் தாண்டி, வாரத்திற்கு ஒருமுறையாவது மொபைல் போனை ஒதுக்கி வைத்துவிட்டு இருவரும் மனம் விட்டுப் பேசுங்கள்.
ஒரு பிரச்சினை குறித்துப் பேசும்போது, பழைய சண்டைகளை மீண்டும் இழுக்காதீர்கள். தற்போதைய பிரச்சினைக்கு மட்டும் தீர்வு காண முயலுங்கள்.
அவருக்குப் பிடித்த பொழுதுபோக்குகள் அல்லது நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடச் சிறிது இடைவெளி கொடுங்கள். அது உங்கள் மீதான அன்பை அதிகரிக்கும்.
ஒவ்வொரு நபரும் வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள். ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்துகொள்ளக் கொஞ்சம் காலமும், நிறைய அன்பும் தேவை. பொறுமையுடன் காத்திருங்கள்!