Maalaimalar
பூஜை மற்றும் தீபாராதனையின்போது மணி அடிப்பது மனதை ஒருமுகப்படுத்தவும், எதிர்மறை எண்ணங்களை விலக்கி தெய்வீக சூழலை உருவாக்கவும் உதவுகிறது.
மணியின் ஒலி மனதில் ஓடிக்கொண்டிருக்கும் தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி, நம் மனதை மீண்டும் பூஜையை நோக்கி திருப்புகிறது.
மணியின் சத்தம் வீட்டிற்கு மங்களத்தையும் அமைதியையும் தருகிறது. அதனால்தான் பூஜையின்போது மணி அடிப்பது மிகவும் முக்கியமானது.
பிரணவ ஒலியின் (ஓம்) அதிர்வாக மணி ஓசை கருதப்படுகிறது.
பூஜையின்போது மணியை உபயோகப்படுத்துவதற்கு முன்பாக ‘ஆகமார்த்தம் து தேவாநாம் கமனார்த்தம் து ரக்ஷஸாம், கண்டாரவம் கரோம்யாதௌ தேவதாஹ்வான லாஞ்ச்சநம்’ என்ற மந்திரத்தைச் சொல்வார்கள்.
தீயவை விலகி, சுபத்தினை தரக்கூடிய மங்களகரமான தேவதைகளின் சக்தி வந்து சேரட்டும் என்பதே இந்த மந்திரத்தின் அர்த்தமாகும்.
மணியிலிருந்து வரும் சத்தமானது, நம்முடைய மூளைக்குள் 7 விநாடிகள் தங்கியிருப்பதாகவும், இதனால் 7 சக்கரங்களும் தூண்டப்படுவதாகவும் அறிவியல் கூறுகின்றன.
பித்தளை அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்ட மணிகள் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றன.