அண்ணாமலையார் பெயர்க்காரணம் தெரியுமா?

Maalaimalar

'அண்ணுதல்' என்றால் 'நெருங்குதல்' என்றும், 'அண்ணா' என்பதற்கு 'நெருங்க முடியாத' என்றும் பொருள்.

பிரம்மதேவராலும், மகாவிஷ்ணுவாலும் அடி முடி காண முடியாத வகையிலும், நெருங்க முடியாத நெருப்பு மலையாகவும் சிவபெருமான் உருமாறி நின்றதால், இந்தத் திருத்தலமானது, 'திருவண்ணாமலை' என்று பெயர் பெற்றது.

திருவண்ணாமலையில் அருளும் சிவபெருமான் 'அண்ணாமலையார்' என்றும் காரணப் பெயர் கொண்டு அருள்பாலிக்கிறார்.

இத்தலம் வடமொழியில் 'அருணாச்சலம்' என்றும், இறைவன் 'அருணாச்சலேஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

'அருணம்' என்பதற்கு 'சிவப்பு நிற நெருப்பு' என்றும், ‘சலம்' என்பதற்கு 'மலை' என்று பொருள்.

சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மையுடன் சிவபெருமான் இருப்பதால், இத்தலம் 'அருணாச்சலம்' என்றும், ஈஸ்வரன் 'அருணாச்சலேஸ்வரர்' என்றும் பெயர் பெற்று விளங்குகின்றனர்.