தீபாவளி ஸ்பெஷல் கருப்பு கவுனி ஹல்வா

Maalaimalar

தீபாவளி என்றாலே இனிப்புதான் முதல் நினைவு. இந்த முறை வழக்கமான இனிப்புகளை தாண்டி, ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த கருப்பு கவுனி அல்வா வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

1 கப் கருப்பு கவுனி அரிசியை நன்கு கழுவி 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

ஊறிய அரிசியை சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து, மெல்லிய வடிகட்டியில் வடிகட்டி பால் எடுக்கவும்.

1 கப் வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

அடி கனமான கடாயில் அரிசி பால் + வெல்லம் பாகு சேர்த்து மிதமான தீயில் கட்டி தட்டாமல் தொடர்ந்து கிளறவும்.

கலவை கெட்டியாகி வரும்போது 3-4 ஸ்பூன் நெய் சிறிது சிறிதாக சேர்த்து, கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளறவும்.

இறுதியில் ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும். சுவையான ஹெல்தி கருப்பு கவுனி ஹல்வா ரெடி..!