சுவையான பஞ்சாமிர்த பர்பியும், சமையல் குறிப்புகளும்..!

undefined

கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா செய்யும்போது கூடவே மில்க்மெய்ட் ஊற்றி கிளறினால் அல்வா மணம், ருசியுடன் இருக்கும்.
முருங்கை இலையை உருவிய பிறகு காம்புகளை நறுக்கிப்போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பிடலாம். அது உடல், கை, கால் அசதிக்கு நல்லது.
நெய் ஊற்றி ரவா லட்டு செய்த பின்பு தூய வெண்மை நிறம் கிடைக்க, சர்க்கரையை பொடித்து அதில் லட்டை புரட்டி எடுக்க வேண்டும்.
கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து பஜ்ஜி செய்தால் சுவை அமோகமாக இருக்கும்.
தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் செய்த பின்பு மோர் மிளகாயை எண்ணெய்யில் பொரித்து பொடி செய்து தூவினால் சுவையாக இருக்கும்.
பஞ்சாமிர்தத்துடன் ஒரு கப் பால் சேர்த்து ஒரு மூடி தேங்காய் துருவல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாணலியை அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் கொட்டி கிளறி தட்டில் கொட்டி துண்டுகளாக்கினால் பஞ்சாமிர்த பர்பி ரெடி
2 டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை செய்தால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.
Explore