தீபாவளி ஸ்பெஷல்: ரசகுல்லா செய்வது எப்படி?

Maalaimalar

தேவையான பொருட்கள் பசும்பால், எலுமிச்சை சாறு, சர்க்கரை, தண்ணீர் மற்றும் ஏலக்காய் தூள்.

பாலை நன்றாகக் காய்ச்சி, எலுமிச்சை சாற்றை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றிக் கிளறினால் பால் திரிந்து பன்னீர் தனியாக வரும்.

திரிந்த பன்னீரை வெள்ளைத்துணியில் ஊற்றி, குளிர்ந்த நீரால் கழுவவும். பின்னர் துணியை நன்றாகப் பிழிந்து 30 நிமிடங்கள் தொங்கவிடவும்.

பன்னீரை ஒரு தட்டில் மாற்றி, உள்ளங்கையால் அழுத்தி 8 முதல் 10 நிமிடங்கள் நன்றாகப் பிசைய வேண்டும். மாவு மென்மையாக, வெண்ணெய் பதத்திற்கு வர வேண்டும்.

பிசைந்த மாவைச் சிறிய மற்றும் விரிசல்கள் இல்லாத வட்ட வடிவ உருண்டைகளாக உருட்டி தனியாக எடுத்து கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்து பாகு கொதி நிலைக்கு வர வேண்டும்.

கொதிக்கும் பாகில் உருண்டைகளைப் போட்டு, மூடி வைத்து 15 நிமிடங்கள் நடுத்தரத் தீயில் வேகவிடவும்.

உருண்டைகள் இரட்டிப்பு அளவாக மாறும். ஆறிய பின் சுவையான ரசகுல்லாவை உண்ணலாம்!