சுவையும், ஆரோக்கியமும் நிறைந்த பலாப்பழம்

Rebecca

பலாப்பழத்தில் புரதச்சத்து, மாவுச்சத்து, A, B, C வைட்டமின்கள், கால்சியம், துத்தநாகம், பாஸ்பரஸ் உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
பலாவின் இலை, காய், பழம், விதை, பால், வேர் என அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் A, C நோய் எதிர்ப்பு சக்தி, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளை சரிசெய்கிறது.
பலா, குடல்களில் ஏற்படும் நோய்களை போக்கி, குடல்களின் இயக்கத்தை மேம்படுத்தும்.
இதில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை உறுதியாக்குவதுடன், எலும்பு தேய்மானம், மூட்டு வலி பிரச்சினை களையும் குணப்படுத்த உதவுகிறது.
பலாப்பழம், ரத்தத்தில் உள்ள சோடியம் உப்பின் அளவை சரியான அளவில் பராமரித்து உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது.
இதில் இருக்கும் கரோட்டினாய்டு சத்து, டைப்- 2 நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்க உதவுகிறது.
இதில் உள்ள கார்போஹைட்ரேட், உடலில் ஆற்றலை அதிகரிக்கும். பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க கூடியது.
உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.
Explore