தீபாவளி ஸ்பெஷல்: பாரம்பரிய அதிரசம்

Maalaimalar

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 1 கிலோ

பாகு வெல்லம் - 3/4 கிலோ

ஏலக்காய் பொடி - 1 ஸ்பூன்

சுக்கு தூள் - 3 ஸ்பூன்

நெய் - 1 ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

முதலில் அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியை ஒரு வெள்ளை துணியில் போட்டு உலர வைக்கவும்.

அரிசியை வெயிலில் காய வைக்க கூடாது. உலர வைத்த அரிசியை தொட்டு பார்த்தால் லேசான ஈரத்துடன் கையில் அரிசி ஒட்ட வேண்டும்.

அரிசியை மிஷினில் அரைத்து சலித்துக்கொள்ளவும். மாவுடன் சுக்கு தூள், ஏலக்காய் தூள் கலந்து வைத்துக்கொள்ளவும்.

பாகு வெல்லத்தை அடிகனமான பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ச்சவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டவும். மீண்டும் அடுப்பில் வைத்து பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும்.

ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துக்கொள்ளவும். வெல்லப்பாகை அதில் ஊற்றினால் கையில் எடுத்து உருட்ட வந்தால் பாகு பதம் தயாராகி விட்டது.

அடுப்பை அணைத்து விட்டு, சூடான பாகில் அரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும்.

மாவின் மேல் நெய் தடவி, காற்றுப் புகாத பாத்திரத்தில் ஒரு நாள் வைத்து விடவும்.

அதிரச மாவை சிறு உருண்டைகளாக எடுத்து வாழை இலையில் வைத்து தட்டவும்.

சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான அதிரசம் தயார்.