Maalaimalar
மைதா மாவு - 2 கப்
ரவை - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
சூடான நெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
துருவிய தேங்காய் - அரை கப்
பொட்டுக்கடலை - கால் கப்
சர்க்கரை - அரை கப்
ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்
முந்திரி, பாதாம் - சிறிதளவு
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, ரவை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி, அதில் சூடான நெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
மாவுடன் தண்ணீர் தெளித்து, கெட்டியான பதத்தில் பிசைந்து, ஈரத்துணி போட்டு மூடி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு வாணலியில் 1 ஸ்பூன் நெய்விட்டு, துருவிய தேங்காயை ஈரப்பதம் போகும் வரை மிதமான தீயில் லேசாக வறுக்கவும்.
மிக்ஸி ஜாரில், சர்க்கரை, பொட்டுக்கடலை, சர்க்கரை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வறுத்த தேங்காய் மற்றும் பொடித்த முந்திரி, பாதாம் பருப்புகள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஊறவைத்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, மெல்லிய வட்ட வடிவில் தேய்த்து அதன் நடுவில் தயார் செய்து வைத்துள்ள பூரணத்தை ஒரு ஸ்பூன் வைக்க வேண்டும்.
மாவின் விளிம்புகளில் லேசாக தண்ணீர் தடவி, அரைவட்ட வடிவில் மடிக்க வேண்டும். விளிம்புகள் பிரியாமல் இருக்க நன்றாக அழுத்தி விட வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் இருக்கும்போது, செய்து வைத்துள்ள சோமாஸ்களை மெதுவாக போட்டு பொரிக்க வேண்டும்.
இரண்டு பக்கமும் பொன்னிறமாக மொறுமொறுப்பாக வெந்ததும் எண்ணெயில் இருந்து எடுத்தால் மொறுமொறுப்பான இனிப்பு சோமாஸ் தயார்!