Maalaimalar
பச்சரிசி - 1 கிலோ
பொட்டுக்கடலை - 150 கிராம்
உளுந்தம்பருப்பு - 100 கிராம்
வெண்ணெய் - 50 கிராம்
ஓமம் - 1 ஸ்பூன்
எள் (வெள்ளை அல்லது கருப்பு) - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
பச்சரிசியை நன்றாக கழுவி, வெயிலில் நன்றாக காய வைத்துக்கொள்ளவும்.
உளுந்தம்பருப்பை வாசம் வரும் வரை நன்றாக வறுத்துக்கொள்ளவும். பொட்டுக்கடலையை லேசான சூட்டில் 1 நிமிடம் வறுத்து ஆற வைக்கவும்.
மாவு மிஷினில் பச்சரிசி, உளுந்தம்பருப்பு, பொட்டுக்கடலை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். (அ) கடையில் வாங்கிய இடியாப்பம் மாவு /முறுக்கு மாவை பயன்படுத்தலாம். மாவை சலித்து பயன்படுத்தவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு கலவையை சேர்த்து, அதனுடன் ஓமம், எள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதனுடன் வெண்ணெய் சேர்த்து மாவை நன்றாக பிசையவும்.
பின்னர் சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து, முறுக்கு மாவு பதத்திற்கு (கையில் ஒட்டாத பதத்தில்) பிசைந்து கொள்ளவும். மாவு காய்ந்துவிடாமல் இருக்க ஒரு ஈரத்துணியால் மூடி வைக்க வேண்டும்.
பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு உரலில் வைத்து, சிறிய தட்டுகளில் முறுக்குகளாகப் பிழிய வேண்டும்.
வாணலியில் பொரிக்கத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கி, எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும்போது, பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை மெதுவாக எடுத்து போடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, முறுக்கின் சத்தம் அடங்கி, பொன்னிறமாக மொறுமொறுப்பாக வரும் வரை இரண்டு பக்கமும் திருப்பிவிட்டு பொரித்து எடுத்தால் சுவையான முறுக்கு தயார்.