Maalaimalar
பால் - 1 லிட்டர்
எலுமிச்சை சாறு - சிறிதளவு
சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 லிட்டர் பாலை ஊற்றி, மிதமான தீயில் வைத்து காய்ச்சவும்.
பாலை அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கடாயின் ஓரத்தில் படியும் பாலாடையை சுரண்டி மீண்டும் பாலில் சேர்க்கவும்.
பால் நன்றாகச் சுண்டி கெட்டியான பதத்திற்கு வரும்போது எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்.
பால் திரிந்து வந்த பிறகு சர்க்கரை சேர்க்கவும். பால் மீண்டும் சற்று இளகும், தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பால் கலவை கடாயின் ஒட்டாமல் திரண்டு வரும்போது, நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகக் கிளறிவிட்டு அடுப்பை அணைத்தால் சுவையான பால்கோவா தயார்.