Maalaimalar
வாசம் வீசும் சோம்பு!
ஒரு பேனில் கொஞ்சமா ஆயில் ஊத்தி சூடானதும், சோம்பு சேர்த்து நல்லா பொரிய விடவும்.
சின்ன வெங்காயம் காம்பினேஷன்!
இதனுடன் 10 முதல் 15 சின்ன வெங்காயம், சிறிதளவு கருவேப்பிலை மற்றும் இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து நல்லா வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட்!
வெங்காயம் வதங்கியதும், ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போக ஒரு நிமிடம் வதக்கி விடவும்.
தேங்காய் பூ மேஜிக்!
அதனுடன் ஒரு நான்கு ஸ்பூன் அளவு துருவிய தேங்காய் பூ சேர்த்து, லோ ஃபிளேமில் வச்சு இரண்டு நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.
போன்லெஸ் சிக்கன்!
நன்றாக வாஷ் பண்ணி குட்டி குட்டி துண்டுகளா வெட்டுன 300 கிராம் போன்லெஸ் சிக்கனை இதோட சேர்க்கவும்.
காரசாரமான மசாலா!
ஒரு பின்ச் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் அரை ஸ்பூன் சிக்கன் மசாலா சேர்த்து நல்லா மிக்ஸ் பண்ணவும்.
சுருள வதக்குங்க!
மூடி போட்டு லோ டு மீடியம் ஃபிளேமில் 10 - 12 நிமிடங்கள் வேக விடுங்க. சிக்கன்ல வர்ற தண்ணீரிலேயே அது நல்லா வெந்து சுருள வதங்கிடும்.
கொரகொரப்பான பதம்!
வெந்த சிக்கன் நல்லா ஆறுனதும், ஒரு மிக்ஸி ஜார்ல மாத்தி தண்ணீர் ஊத்தாம கொஞ்சம் கொரகொரப்பா, உதிரி உதிரியா அரைச்சு எடுத்துக்கொள்ளவும்
உடையாமல் இருக்க ரகசியம்!
அரைச்ச சிக்கனோட இரண்டு ஸ்பூன் பொட்டுக்கடலை மாவு, ஒரு முட்டை மற்றும் நறுக்கிய மல்லி இலைகளைச் சேர்த்து கைவிட்டு நல்லா பிசைஞ்சுக்கொள்ளவும்.
குட்டி குட்டி பால்ஸ்!
கையில் கொஞ்சமா ஆயில் அப்ளை பண்ணிட்டு, பிசைஞ்சு வச்சிருக்க மாவை சின்ன சின்ன உருண்டைகளா உருட்டி எடுத்து கொள்ளவும்.
மீடியம் ஹீட் ஆயில்!
எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும்போது உருண்டைகளைப் போடுங்க. போட்டதும் திருப்பாம, லோ டு மீடியம் ஃபிளேமில் வச்சு கோல்டன் பிரவுன் கலர்ல பொரிச்சு எடுத்துக்கொள்ளவும்.!
கோலா உருண்டை ரெடி!
சுடச்சுட மொறுமொறு சிக்கன் கோலா உருண்டை தயார்! குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்நாக்கா செஞ்சு கொடுத்தா தட்டே காலியாகிடும்!