பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

Maalaimalar

சாம்பார் தண்ணீராக இருந்தால், பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்க்கலாம். சாம்பார் கெட்டிப்படுவதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும்.

சாம்பார் மணக்க, வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் கடைசியில் சேர்த்தால் சாம்பார் மணமாக இருக்கும்.

வெந்தயக்கீரை சமைக்கும் போது சிறிது வெல்லம் கலந்து சமைத்தால் கசப்பு தன்மை இருக்காது.

வெங்காய பக்கோடாவுக்கு அரை டீஸ்பூன் சோம்பு, கறிவேப்பிலை கொஞ்சம் போட்டால் வாசனையாக இருக்கும்.

மாவு அரைக்கும் போது வேகவைத்த சாதத்தை சிறிது சேர்த்து அரைத்தால் வார்க்கும் தோசை மிருதுவாக இருக்கும்.

இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறுமொறுவென்றும், பொன்னிறமாகவும் இருக்கும்.

தேங்காயை அதன் கண் பகுதி மேல் நோக்கியவாறு வைத்தால், நீண்ட நாள்வரை அழுகிப் போகாமலிருக்கும்.

சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும்.

பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.

தொடர்ந்து WEB STORY- களை காண இங்கே க்ளிக் செய்யவும்