தர்பூசணியுடன் தயிர் சேர்த்து சாப்பிடலாமா?

Maalaimalar

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதுடன், பொட்டாசியம், வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை பெற உதவும்.

உடலில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு தர்பூசணியில் உள்ள சிட்ருலின் துணைபுரியக்கூடும்.

தர்பூசணியில் புரதச்சத்து குறைவாகவே இருக்கும். இதனுடன் தயிர் சேர்த்து சாப்பிடும்போது புரதச்சத்தையும் கூடுதலாகப் பெறலாம்.

தயிரில் உடலுக்கு தேவையான 9 அத்தியாவசிய அமினோ அமிலங்களையும் கொண்ட முழுமையான புரதம், கால்சியமும் நிறைந்திருக்கிறது.

நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தயிரில் இருப்பதால் குடல் ஆரோக்கியத்துக்கு உதவிடும்.

தர்ப்பூசணியுடன் தயிரை சேர்த்து சிற்றுண்டியாக உட்கொள்ளலாம்.

உடற்பயிற்சி செய்த பிறகு நீர்ச்சத்து மற்றும் புரதத்தை பெற தர்பூசணி, தயிர் சிறந்த தேர்வாக இருக்கும்.