சளி, இருமலின் போது அன்னாசி பழம் சாப்பிடலாமா?

Rebecca

சளி, இருமலின் போது அன்னாசி பழம் சாப்பிடலாம். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டை வலியை குறைக்கும்.
அன்னாசி பழத்தில் புரோமெலைன் என்னும் நொதி உள்ளது. இந்த நொதி சளி, இருமலுடன் தொடர்புடைய வீக்கத்தை குறைக்க உதவும்.
குறிப்பாக சுவாச பாதையில் படிந்திருக்கும் சளியை அப்புறப்படுத்திவிடும் ஆற்றல் கொண்டது.
மேலும் அன்னாசி பழத்தில் வைட்டமின் C இருப்பதால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
எனினும் அன்னாசி பழம் அதிக அமிலத்தன்மை கொண்டது என்பதால் சிலருக்கு தொண்டையில் எரிச்சலை உண்டாக்கும்.
தொண்டையில் எரிச்சலை உணர்ந்தால் அன்னாசி பழத்தை குறைவாக சாப்பிடலாம் அல்லது தவிர்த்து விடலாம்.
நீரிழிவு நோயாளிகள் இதை உட்கொள்ளும் போது, அதில் உள்ள சர்க்கரையின் அளவைக் கருத்தில் கொண்டு, அளவோடு சாப்பிட வேண்டும்
Explore