கோப்ரா லில்லி மிகவும் அபூர்வமான மலர்..கோப்ரா லில்லி என்ற மலர் மேற்கு தொடர்ச்சி மலையில் 1932-ம் ஆண்டு கண்டறியப்பட்டது..இது ஒரு மாமிச உண்ணி தாவரம் ஆகும்..பார்ப்பதற்கு பாம்பின் தலையை போல இருப்பதால் தான் இந்த மலருக்கு 'கோப்ரா லில்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது..கோப்ரா லில்லியின் வடிவம் கண்ணாடி இழையை போலவும், மிளிரும் வண்ணத்திலும் இருக்கும்..ஈரமான மண் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியில் வளரும்..இவற்றின் அமைப்பு குழாய் வடிவ ஜாடி நேராக நிமிர்ந்து செங்குத்தாக நிற்பது போன்று தோற்றமளிக்கும்..மலைவாழ் மக்கள் இந்த மலரை, குடல் சம்பந்தப்பட்ட பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர்..புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையும் இந்த மலருக்கு உண்டு என்று கூறப்படுகிறது..மலைவாழ் மக்கள் இந்த மலர், மலர்வதை வைத்துதான் பருவ மழையை கணக்கிட்டு வருகிறார்களாம்..Explore