2026ல் பிளாக்பஸ்டர் படைத்த அனிமேஷன் திரைப்படங்கள்...

Maalaimalar

தி சூப்பர் மரியோ கேலக்ஸி மூவி

விண்வெளியில் உள்ள புதுப்புது உலகங்களுக்கு நம் நினைவுகளை அழைத்து செல்லும் வண்ணமாக இப்படத்தின் கதைக்களம் உள்ளது. உலகளவில் மில்லியன் டாலர் அளவு வசூல் சாதனை படைத்துள்ளது.

டாய் ஸ்டோரி 5

தற்கால டிஜிட்டல் உலகத்தையும் பொம்மைகளின் போராட்டங்களையும் மையமாகக் கொண்ட கதையாகும்.

கோட் (ஆடு)

விளையாட்டுத்தனத்துடன் நகைச்சுவையுடனும் மீள்திறன், கடின உழைப்பு மற்றும் உடல் ரீதியான எதிர்பார்ப்புகளை மீறுதல் போன்ற கருப்பொருள்களை கொண்டுள்ளது. முழுக்க முழுக்க விலங்குகளைக் கொண்ட ஒரு பின்னணியில் ஒரு ஆட்டின் வெற்றிக்கதையாக விளங்குகிறது.

ஸ்வாப்ட

மின்னும் மாயாஜால ஒளியின் மூலம் உடல்களை மாற்றிக்கொள்ளும் வண்ணமாகவும் நட்பு காதல் வஞ்சகம் போன்றவற்றை கொண்டு மனதைக் கவரும் வகையில் உள்ளது.

மினியன்ஸ் & மான்ஸ்டர்ஸ்

1920களில் ஹாலிவுட் படப்பிடிப்பில் இருக்கும் மினியன்கள், தற்செயலாக அரக்கர்களை வரவழைத்தல், பின் பூமியை காப்பாற்றுதல் போன்ற கதை அம்சம் உள்ளது.

ஹாப்பர்ஸ்

விலங்குகள் மீது மிகுந்த அன்பு கொண்ட மேபல் என்ற கல்லூரி மாணவி, உண்மையான விலங்குகளுடன் உரையாடுவதற்கும் அவற்றின் இயற்கை வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்கும், தனது மனதை உயிருள்ளதைப் போன்ற ஒரு ரோபோ நீர்நாய்க்குள் மாற்றுவதுமாக அறிவியல் புணைந்த படமாக விளங்குகிறது.

மேலும் தொடர...