மனித உடலில் உயிரியல் கடிகாரம் - தெரிந்து கொள்வோமா?

Maalaimalar

ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியத்துடன் வாழ குறிப்பிட்ட நேரம் வரை ஆழ்ந்த தூக்கம் உடலுக்கு முக்கியமான ஒன்று.

இரவு நேரத்தில் ஒரு மனிதன் தூங்கும்போது உடலுக்கு ஓய்வு கிடைக்கிறது. இந்த நேரத்தில் உடல் செல்கள் புதுப்பித்து கொள்கின்றன.

தூங்கும்போது உடலில் சேதமடைந்த மரபணுக்கள் சரி செய்யப்படுகின்றன. உடலின் ஆற்றல் உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் செயல்பாடுகளும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

உடலில் இருக்கும் 'சிர்காடியன் ரிதம்' என்ற உயிரியல் கடிகாரம் தூக்கம், விழிப்பு, ஹார்மோன் சுரப்பு, உடல் வெப்பநிலை, செல்களை சீரமைக்கும் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது.

மெலட்டோனின் என்ற ஹார்மோன், உடலுக்கு இரவு நேரம் வந்துவிட்டதை உணர்த்த உதவுகிறது.

மனிதர்களின் வாழ்வியல் பழக்கவழக்கங்கள் இந்த உயிரியல் கடிகாரத்தின் இயற்கை செயல்பாட்டை மாற்றுகின்றன.

இரவு நேரத்தில் தொடர்ந்து விழிப்பது, தூக்க நேரத்தை அடிக்கடி மாற்றுவது, அளவுக்கு அதிகமாக தூங்குவது போன்றவை உடலின் உயிரியல் கடிகாரத்தை குழப்பம் அடைய செய்கிறது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தூக்கத்தின் அளவு மட்டுமல்ல, தூங்கும் நேரத்தின் ஒழுங்கும் முக்கியமானது.

தினமும் சீரான நேரத்தில் தூங்கி எழுவது, காலையில் சூரிய ஒளியை பெறுவது, இரவில் பிரகாசமான ஒளியை குறைப்பது ஆகியவை உயிரியல் கடிகாரத்தை சீராக வைத்திருக்க உதவும்.