வெற்றிலையை மென்று சாப்பிடுவது நல்லதா?

Maalaimalar

வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் உடலுக்கு ஆரோக்கிய உணர்வு, அதிக விழிப்புணர்வு, வியர்வை மற்றும் உமிழ்நீர் சுரப்பும் அதிகரிக்கும்.

வெற்றிலை பயன்படுத்தும்போது அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும்.

வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து உள்ளது. தாய்ப்பால் சுரப்பைத் தூண்ட வெற்றிலையைப் பயன்படுத்துவது பாரம்பரிய வைத்தியத்தில் வழக்கம்.

வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது.

நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

வெற்றிலை, பாக்கை அளவோடு சாப்பிட்டுவந்தால், ஆண்மை குறைபாடும் நீங்கும்.

வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசியை தூண்டும்.

வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்நாற்றம் பிரச்சனை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் இந்த பிரச்சனைகள் குணமாகும்.

ஒரு வெற்றிலையினுள் 6 துளசி இலைகளை வைத்து சிறிது கசக்கி பிழிந்து வருகின்ற சாற்றினை குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி, இருமல் குணமாகும்.