Maalaimalar
கொதிக்கக் கொதிக்கக் குடிக்காமல், வெதுவெதுப்பான நீராகக் குடிப்பதே உடலுக்கு மிகவும் நல்லது.
காலையில் வெதுவெதுப்பான நீர் குடிப்பதால் இரைப்பை மற்றும் குடல் இயக்கம் தூண்டப்பட்டு, உணவு எளிதில் செரிமானமாகும்.
குடலில் தேங்கியுள்ள கழிவுகளை எளிதில் வெளியேற்றி, மலச்சிக்கல் வராமல் தடுக்க இது ஒரு சிறந்த இயற்கை வழியாகும்.
வெந்நீர் உடலின் வெப்பநிலையைச் சற்று அதிகரித்து, மெட்டபாலிசத்தை வேகப்படுத்தி கொழுப்பைக் கரைக்க உதவும்.
நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, காலை நேரச் சோர்வைப் போக்கி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்.
உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற நச்சுக்களை வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக வெளியேற்றி உடலைச் சுத்தப்படுத்தும்.
வெந்நீரின் ஆவி மற்றும் வெப்பம் தொண்டையில் உள்ள சளியைக் கரைத்து, சுவாசப் பாதையைச் சீராக்கும்.
ரத்த நாளங்களை விரிவடையச் செய்து உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ரத்த ஓட்டம் சீராவதால் சரும செல்களுக்குப் புத்துணர்ச்சி கிடைத்து, முகம் இயற்கையான பொலிவு பெறும்.
வெதுவெதுப்பான நீர் வயிற்றுத் தசைகளைத் தளர்த்துவதால், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி குறையும்.
மிகவும் சூடான நீரைக் குடித்தால் நாக்கு மற்றும் உணவுக்குழாயில் புண்கள் ஏற்படலாம்; எனவே மிதமான சூட்டில் குடிக்கவும்.