பெர்சிமன் பழத்தின் நன்மைகள்!

Rebecca

வாழ்நாளில் ஒருமுறையாவது சுவைத்துப் பார்க்க வேண்டிய பழங்களில் ஒன்று தான் இந்த சீமை பனிச்சை பழம் என்று அழைக்கப்படும் பெர்சிமன் (persimmon). இதன் தாவரவியல் பெயர் டயோஸ்பரஸ் காகி.
பார்ப்பதற்கு தக்காளிப் பழம் போன்று இருக்கும் இது உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலி நியூட்ரியன்ட்டுகள் போன்றவற்றையும் அதிகமாக பெற்றுள்ளன.
இன்று எல்லா நாடுகளிலும் இது மிகவும் பிரசித்தி பெற்றுள்ள இது ஜப்பானின் தேசிய பழமாக பெருமைபடுத்தப்படுகிறது.
சற்று அதிகமான விலையில் விற்கப்படும் இப்பழத்தினுள் பெரும்பாலும் விதை இருக்காது. இதில் பல ரகங்கள் இருந்தாலும் பொதுவாக கடைகளில் இரண்டு வகைகளைப் பார்ககலாம்.
ஒன்றில் கசப்பு இருக்கும் மற்றொன்றில் கசப்பு இருக்காது. இந்த பழம் பழங்காலத்திலேயே சீனாவைப் பூர்விகமாக கொண்டுள்ளது. அதன் பின் ஜப்பானுக்கு அறிமுகமாகியது. நாளடைவில் அது அந்த நாட்டின் தேசிய பழமாகவே மாறிவிட்டது.
இவற்றில் மிக அதிகமாக ஆண்டி ஆக்ஸிடன்ட், வைட்டமின் A, மேக்னீஸ், நார்சத்து குறிப்பாக கரையக்கூடிய நார்சத்து, வைட்டமின் B காம்பிளக்ஸ், பொட்டாசியம் மற்றும் கால்சியம் உள்ளன.
கட்டிகள் மற்றும் புற்று நோய் உருவாகுவதை தடுக்கும் சக்தியைப் இப்பழம் பெற்றுள்ளது. மேலும் இது தசைகளுக்கும் கல்லீரலின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
இதில் உள்ள டானின் இரத்த உறைதலை முடுக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கவும் , இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கவும் உதவுகிறது.
இந்தப் பழத்தை அப்படியே பச்சையாக சாப்பிட்டால் மலச்சிக்கல் அகலும். ஆனால் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கில் விட்டு விடும். சமைத்த பழம் வயிற்றுப்போக்கு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
Explore