Maalaimalar
மஞ்சளில் உள்ள Curcumin மற்றும் பாலில் உள்ள Tryptophan இணைந்து Melatonin ஹார்மோனை அதிகரிக்கிறது. தூக்கமின்மை பிரச்சனைக்கு சிறந்த இயற்கை தீர்வு.
இரவில் குடிப்பதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.
இரவு உணவுக்கு பிறகு மஞ்சள் பால் குடிப்பதால், வயிறு உப்புசம், அசிடிட்டி, வாயு தொல்லை நீங்கி, காலையில் Fresh-ஆக உணரலாம்.
ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலில் உள்ள Toxins-ஐ வெளியேற்றுகிறது. தினமும் குடித்து வந்தால் முகப்பரு குறைந்து, சருமம் இயற்கையாக பளபளக்கும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கொழுப்பை எரிக்க உதவுகிறது.
மன அழுத்தம், பதட்டத்தை குறைத்து மனதை அமைதிப்படுத்துகிறது.
கெட்ட கொழுப்பை குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.
ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கவும் உதவுகிறது.
எப்படி தயாரிப்பது?-
1 கிளாஸ் சூடான பால் + 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் + ஒரு சிட்டிகை மிளகு + தேன். தூங்குவதற்கு 30 நிமிடம் முன் குடிக்கவும்!