தனியா நீரில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்டுகள், வைட்டமின்கள் C மற்றும் E போன்றவை நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகின்றன..நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிடம் இருந்தும் பாதுகாக்கின்றன. நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டுவதன் மூலம் ஹார்மோன் சமநிலையின்மையை ஒழுங்குபடுத்துகின்றன..பெண்களை பொறுத்தவரை மாதவிடாய் பிரச்சினைகளை சுமூகமாக எதிர்கொள்ள உதவிடும். தைராய்டு ஆரோக்கியத்தையும், மனநிலையையும் மேம்படுத்தும்..தனியாவில் இருக்கும் டையூரிடிக் பண்புகள் நச்சுகளை வெளியேற்றும். சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலை சுத்தப்படுத்தும்..தனியா நீர் சிறுநீர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சிறுநீர் பையில் சிறுநீர் தேங்குவதை கட்டுப்படுத்தும். வயிறு வீக்கத்தையும் குறைக்கும்..ரத்த ஓட்டத்தையும், சரும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவிடும்..தனியா தண்ணீர் தயாரிப்புக்கு ஒரு டேபிள்ஸ்பூன் தனியாவை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் அதனை வடிகட்டி குடிக்கவும்..Explore