Maalaimalar
இன்னும் 8 நாளில்.. அதாவது வரும் நவம்பர் 1ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏவுக்கான தேர்வு நடைபெற உள்ளது.
குறைந்த நாட்களே இருப்பதால், தேர்வர்கள் அதை எண்ணி அச்சப்பட வேண்டாம். உங்களுக்காக சில டிப்ஸ்கள் உள்ளே..
200 கேள்வியில் 100 கேள்வி தமிழ். இதில் 80க்கு மேல் எடுத்தால் தான் Pass. அதனால், இனி 8 நாளும் தினமும் 3 மணி நேரம் பொதுத்தமிழ் படிங்க. 6-12ம் வகுப்பு புத்தகத்தை தவிர வேற எதுவும் தொடாதீங்க..
குறைந்தது 15 கேள்வி திருக்குறள் தொடர்பாக வரும். 40 முக்கிய குறள் மட்டும் மனப்பாடம் பண்ணுங்க - அன்புடைமை, கல்வி, ஒழுக்கமுடைமை, நட்பு அதிகாரங்கள். ஒரு குறளுக்கு பொருள் தெரிந்தால் 2 கேள்விக்கு பதில் எழுதலாம்.
GS-ல் 15 கேள்வி தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து கண்டிப்பா வரும். இதை மட்டும் எழுதி வைத்து படிங்க.. (எ.கா: மகளிர் உரிமைத்தொகை, முதலமைச்சர் காலை உணவு திட்டம்).
25 கேள்வியில் 20 எடுப்பது ரொம்ப ஈஸி. சதவீதம், விகிதம், லாப நஷ்டம், சராசரி, HCF/LCM - இந்த 5 Chapter மட்டும் போதும்.
2022, 2023, 2024 - மூன்று வருட Prelims வினாத்தாள் - 600 கேள்வி. அதை 2 முறை போட்டுப் பார்த்தால் 40% கேள்வி அதே Pattern-ல் வரும். இதை விட பெரிய புத்தகம் எதுவும் இல்லை.
பல பேர் தெரிந்த கேள்விக்கு OMR-ல் தப்பா Shade பண்ணிடுவாங்க. அதனால், வீட்டில் Clock வைத்து 9:30 முதல் 12:30 வரை ஒரு Mock Test-ஐ OMR Sheet-ல் எழுதி பழகுங்க. கடைசி 10 நிமிடம் OMR Check பண்ண நேரம் ஒதுக்குங்க.
இனி புதுசா எதுவும் படிக்காதீங்க. தூக்கம் 7 மணி நேரம் அவசியம். தண்ணீர் நிறைய குடியுங்க. தேர்வு நாள் காலை புளிக்காத, காரமில்லாத உணவு - இட்லி, தயிர் சாதம் பெஸ்ட்.
* முதலில் தெரிந்த கேள்விக்கு மட்டும் பதில்
* தெரியாத கேள்வியை விட்டுவிடுங்கள், பின்னர், Guess பண்ணலாம்.
* Negative Mark இல்லை- 200 கேள்விக்கும் கண்டிப்பா பதில் போடுங்க - காலியா விடாதீங்க..
குறிப்பு
மொத்தம் 200 கேள்வி x 1.5 மார்க் = 300 மார்க், தேர்ச்சி மதிப்பெண் (குறைந்தது)- 90 மார்க் தான்.. அதாவது 30% எடுத்தாலே நீங்க Pass.
ஆனா 90 எடுத்தா மட்டும் Mains-க்கு போக முடியாது. Cut-off-ஐ தாண்டணும். அதாவது, 150 மதிப்பெண்கள் எடுக்கணும். இதற்கு, 100 கேள்விக்கு சரியா பதில் எழுதினா போதும்.