பூனைகளுக்கு இத்தனை சிறப்புகளா? சுவாரசியமான தகவல்கள்

undefined

செல்லப்பிராணிகள் என்றாலே அனைவரும் விரும்புவது நாயும், பூனையும் தான். அதற்கு அடுத்து தான் மற்ற விலங்குகள்.
பூனைகள் சுறுசுறுப்பாகவும், விளையாடுவதில் ஆர்வமாகவும் இருக்கும்.
உலகம் முழுவதும் 40 வகையான பூனை இனங்கள் உள்ளன.அவை பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் காணப்படுகின்றன.
பூனைகள் பொதுவாகத் தனிமையை விரும்பக்கூடியவை.
மிகவும் சுத்தமான விலங்கு என்பதால் தன் உடலை நக்கி, சுத்தம் செய்வற்கே அதிக நேரத்தை செலவிடுகிறது.
பூனைகளுக்கு மூக்கில் ரேகைகள் உள்ளது . நம்மை விட 14 மடங்கு அதிகமாக மோப்ப சக்தியைக் கொண்டுள்ளது.
பூனைகளால் கடல் நீரையும் குடிக்க முடியும்.இவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை கொண்டது.
பூனைகள் இரவில் நன்றாக பார்க்கும் திறன் கொண்டவை.
பூனைகளின் கர்ப்ப காலம் 2 மாதம் தான். 18-20 ஆண்டுகள் வாழும். வாழ்நாளில் 150 குட்டிகள் வரை போடும்.
எத்தனை உயரத்தில் இருந்து விழுந்தாலும் பூனைகள் உயிர்ப்பிழைத்து விடும் தன்மை கொண்டது.
பூனைகளுடன் நேரத்தைச் செலவிடுவது மன அழுத்தத்தைக் குறைக்கவும், அமைதியாகவும் உணர உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன
பூனை இனத்தைப் பாதுகாக்கும் நோக்கத்திற்காக சர்வதேச விலங்குகள் நல நிதியம் கடந்த 2002-ம் ஆண்டு, ஆகஸ்டு 8 ஆம் தேதியை சர்வதேச பூனைகள் தினமாக அறிவித்தது.
Explore