Maalaimalar
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பிறந்து வளர்ந்த இவர், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் பொறியியல் பட்டதாரி.
கல்லூரி காலத்திலேயே மாடலிங் துறையில் கால்பதித்த ஷில்பா, 2013-ஆம் ஆண்டு ‘மிஸ் கர்நாடகா’ பட்டம் வென்றார்.
2017-ல் விஜய் ஆண்டனி நடித்த ‘எமன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்தவர் ஷில்பா மஞ்சுநாத்.
‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் ‘தாரா’ கதாபாத்திரத்தில் இவரது யதார்த்தமான நடிப்பு இன்றும் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
நடிப்பைத் தாண்டி, கன்னடத் திரைப்படமான ‘நிம்ம வஸ்துகலிகே நீவே ஜவாப்தாரரு’ மூலம் இணைத் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
தற்போது ‘சத்தியவான் சாவித்திரி’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்
"Some things just shine naturally" என்ற கேப்ஷனுடன் இவர் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றனர்.