இன்றும் குறையாத அதே இளமை... சிவப்பு உடையில் அசத்தும் நடிகை சதா!

Maalaimalar

மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரியில் பிறந்த இவரது இயற்பெயர் சதாஃப் முகமது சயீத்.

2003-ம் ஆண்டு வெளியான 'ஜெயம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதையும் கொள்ளையடித்தார்.

அஜித்துடன் 'திருப்பதி', மாதவனுடன் 'பிரியசகி', 'எதிரி' மற்றும் 'உன்னாலே உன்னாலே' எனப் பல வெற்றிப் படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

'அந்நியன்' படத்தில் விக்ரமுடன் இணைந்து இவர் ஆடிய பாடல்களும், நடித்த காட்சிகளும் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட்.

தற்போது ஒரு சிறந்த 'Wildlife Photographer'-ஆக வலம் வரும் சதா, காடுகளுக்குச் சென்று வனவிலங்குகளைப் புகைப்படம் எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

மும்பையில் சொந்தமாக உணவகம் நடத்தி வரும் இவர், விலங்குகள் நல ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார்.

தற்போது சினிமாவில் அதிகம் தலைகாட்டாவிட்டாலும், சமூக வலைதளங்களில் தனது அழகிய புகைப்படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

20 ஆண்டுகள் கடந்தும் இன்றும் ஜெயம் படத்தில் பார்த்தது போலவே இளமையாக இருக்கிறீர்கள்" என ரசிகர்கள் சதாவைக் கொண்டாடி வருகின்றனர்.

புடவை முதல் மாடர்ன் உடைகள் வரை எது அணிந்தாலும், தனது நேர்த்தியான ஸ்டைலிங்கால் ரசிகர்களைக் கவர்வதில் சதா எப்போதும் கில்லாடி.

தினசரி உடற்பயிற்சி, யோகா மற்றும் இயற்கையான வாழ்க்கை முறையே தனது பொலிவுக்குக் காரணம் எனப் பேட்டிகளில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் சதா ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.